Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 18.1.2018

18.1.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 5ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பிரதமை திதி காலை 9.52 மணி வரை பின் துதியை திதி.
திருவாதிரை இரவு 12.36 மணி வரை பின் புனர்பூசம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 0. நேத்திரம்- 0.
ஸ்ரீ வாஸவி அக்னிப்பிரவேசம்.
திருவோணம் விரதம்

18.1.2018 வியாழக்கிழமை ராசிபலன்.
மேஷம்: வாழ்க்கையில் ஒழுக்கம் கடைப்பிடிப்போம். குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்றுத் தருவோம். குடும்ப மரியாதை கூடும்.
ரிஷபம்: சிறப்பு சொற்பொழிவு செய்வீர்கள். உங்கள் பேச்சில் கருத்து இருக்கும். அந்தஸ்து மிக்கவர்கள் பாராட்டுவார்கள்.
மிதுனம்: இன்று மதியம் 1.27 வரை சந்திராஷ்டமம். ஸ்ரீ கருமாரி யம்மனை தரிசனம் செய்யுங்கள். மதியத்திற்கு மேல் நன்மைகள் நடக்கும்.
கடகம்; எதிர்பாராமல் பிரயாணம் உருவாகும் இன்று மதியம் 1.27 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். ஸ்ரீ மீனாட்சி தரிசனம் செய்யுங்கள்.
சிம்மம்: அரசியல் செல்வாக்கு அந்தஸ்து கூடும். மக்கள் பணி ஆற்றலாம். மனம் சந்தோஷம் அடையும்.
கன்னி: பெண்களுக்கு பரிசு பொருட்கள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கலாம். சுற்றுலா சந்தோஷம் தரும்.
துலாம்: திட்டமிட்டு காரியத்தை தொடங்கலாம். அது ராங்கா போகாது. தலைமை பதவி கிட்டும்.
விருச்சிகம்: புதிய நட்பை நாடுவோம். அந்த நட்பிடம் இருந்து அன்பு என்னும் மடல் வரும். ஹேப்பி.
தனுசு: நடிகரை சந்திப்போம் அறிமுகம் கிட்டும். ஆனந்தமான நேரம். மறக்க முடியாத தருணம்.
மகரம்; வேலை கிடைச்சாச்சு. வாழ்க்கை வசந்தம். அடுத்து திருமணம் பேசவேண்டியதுதான்.
கும்பம்: எதிர்பாராமல் திருப்பங்கள் உருவாகும். எல்லாம் நன்மைக்கே. உறவு கூடி வாழ்த்தும்.
மீனம்: முதன்மையான மதிப்பெண் வாங்கலாம். தேர்வு விளையாட்டு பணி எல்லாவற்றிலும் எதிர்க்க ஆள் இல்லை.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE