Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இன்றைய ராசி பலன்கள் – 1.2.2018

1.2.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 19ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி மாலை 5.18 மணி வரை பின் துதியை திதி.
ஆயில்யம் நட்சத்திரம் மாலை 4.38 மணி வரை பின் மகம் நட்சத்திரம்.
இன்று சித்த யோகம் மாலை 4.38 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 6 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;

1.2.2018 வியாழக்கிழமை ராசிபலன்கள்.
மேஷம்: நம்பிக்கை அதிகம். செயலை துணிந்து தொடங்கி வெற்றியும் அடைவீர்கள்.
ரிஷபம்: மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நீங்கள் மனம் வைத்துவிட்டால் எல்லாம் ஜெயம்.
பணம் பலவழிகளில் வரும்.
மிதுனம்: வரவு எட்டணா செலவு பத்தணா. பிறகு என்ன? கடன் வாங்கவேண்டும். ஸ்ரீசண்முகரை தரிசனம் செய்யுங்கள் கடன் அடையும்.
கடகம்: உங்கள் மகன் உங்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்வார். சுகமான நாள். கல்வியில் முதல் மதிப்பெண் கிடைக்கும்.
சிம்மம்: முயன்றதால் சாதித்தோம். ஆமைப்போல் ஓடி வென்றுவிடுவோம். வழக்கில் வெற்றி. சினிமா சான்ஸ் தேடி வரும்.
கன்னி: புதிய தேடல் உருவாகும். கூட்டு முயற்சி சகல பலத்தையும் கொடுக்கும். தம்பியுடையன் படைக்கு அஞ்சான்.
துலாம்: தொலைந்த பொருள் கிடைக்கும். தங்கம் வாங்குவிர். பெண்கள் தொழில் கல்வி கற்பார்கள்.
விருச்சிகம்: மனம் போன திசையில் பயணம். எல்லாம் நன்மைக்கே. ரியல்எஸ்டேட் நல்ல லாபம் தரும். சொத்துக்கள் வாங்கலாம்.
தனுசு: இன்று மாலை 4.38 மணி வரை சந்திராஷ்டமம். பின் அசை நாயகியை சந்திப்போம். விருந்தால் குதூகலம்.
மகரம்: இலக்கை நோக்கிய பயணம் தடை உருவாகும். இன்று மாலை 4.38 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் ஆரம்பம். ஸ்ரீகந்த குரு கவசம் படியுங்கள்.
கும்பம்: நிறைக்குடம் ததும்பது. உங்களுக்கு நீகர் நீங்கள் தான். தொழிலாளர்கள் சங்க தலைமை பதவி கிட்டும். பாராட்டுக்கள் குவியும்.
மீனம்: சிந்தனை செயல் வடிவம் பெரும். வியாபார நண்பர்களை சந்திப்போம். புதிய ஒப்பந்தம் உருவாகும். முதல் முயற்சி சிறப்பு.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE