Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 5.3.2018

5.3.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 21ம்தேதி.
கிருஷ்ணப்பட்சதது தேய்பிறை சதுர்த்தி திதி பின்னிரவு 3.29 மணி வரை பின் பஞ்சமி திதி.
சித்திரை நட்சத்திரம் இரவு 10.50 மணி வரை பின் சுவாதி நட்சத்திரம்.
சித்த யோகம் இரவு 10.50 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 6 முதல் 8 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1; ..நேத்திரம்- 2;
ஸங்கட ஹர சதுர்த்தி.
இன்று ஸ்ரீ விநாயகர் வழிபாடு சங்கடங்கள் அகற்றும்.

5.3.2018 திங்கட்கிழமை ராசிபலன்.
மேஷம்: இன்று புதிய திருப்பம் உருவாகும். மலர்ந்த புத்தாண்டு மறுமலர்ச்சி உத்வேகம் பிறக்கும். நல்லவர்களை சந்திப்போம்.
ரிஷபம்: தொழில் விஷயமாக வெளியூர் சென்ற இடமெல்லாம் உங்களுக்கு சிறப்பு. எதிர்பாராமல் பல திருப்புமுனை உருவாகும். பணம் வரும்.
மிதுனம்: பழைய ஞாபகம் வருகிறது. இளமை காலத்தில் பழகியவர்களை சந்திப்போம் உரையாடுவோம். மனம் துள்ளும்.
கடகம்: இளம் பெண்களுக்கு கல்யாண கலை வந்து விட்டது. பெற்றோர்கள் அழகு அந்தஸ்துயுடைய மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். இனி கெட்டி மேளம் கொட்டும்.
சிம்மம்; அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய அரசியல் கட்சியில் சேர்வீர்கள். பல சேவைகள் செய்வீர்கள் புகழ் கிட்டும்.
கன்னி; பணியில் இருந்த குறிக்கிடுகள் விலகும் குறித்த நேரத்தில் காரியத்தை முடிப்பார்கள். உறவுகள் கைக்கொடுக்கும்.
துலாம்: அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்போம். இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வருமானம் உயரும்.
விருச்சிகம்: போன மாச்சான் திரும்பி வந்தான் என பிரிந்த தம்பதியினர் ஒன்றினைவார்கள். இனிய இல்லாற வாழ்க்கைஆரம்பமாகும்.
தனுசு: பல நண்பர்களை தேடி சென்று சந்தித்து கூட்டாக சேர்த்து தொழில் ஆரம்பிக்க முயற்சி செய்வோம். கூட்டு முயற்சி வெற்றியடையும்.
மகரம்: வெளிநாட்டில் தங்கியிருந்து வேலை தேடுவோம். நல்லோரின் உதவியால் பணி கிடைக்கும். சினிமா சான்ஸ் அமையும்.
கும்பம்: முக்கிய நிகழ்ச்சிக்கு நேரம் தவறி செல்வோம் இன்று காலை 10.35 மணி வரை சந்திராஷ்டமம். மதியத்திற்கு பிறகு சந்தோஷம் சம்பவம் நடக்கும்.
மீனம்: திறமைக்கு சோதனை உருவாகும். இன்று காலை 10.35 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். ஸ்ரீ விநாயகர் தரிசனம் செய்யுங்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE