Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்

இந்து வில்லுக்குறி

💫நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்

🔯இரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக்கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும்(Visiting Card),முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும்(Letter pad) காணலாம்.

அந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அது போன்ற குறியீடு சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும்,அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.

ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் இத்தகைய சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் ஒரு முறை தரிசித்து வந்தால் அன்றைய தினம் நாம் செய்த கர்மங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும்.

இந்த கற்சிலைகளைப்பார்த்துதான் மருத்துவத்துறை தங்கள் குறியீட்டை அமைத்துக்கொண்டுள்ளது.

இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் தரிசித்து வந்தால் தீராத வியாதிகள் எல்லாம் தீரும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.

நம் முன்னோர்கள் தினமும் இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை (இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொண்டிருப்பது போன்ற கற்சிலைகள்) கோயில்களில் தரிசித்து வந்தார்கள்.

இதனால் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

இந்த விசயம் தற்கால மனிதர்களுக்கு தெரியாது.

ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு, ரோகக்காரகன் (நோய்க்கு காரணமானவன்),சத்ரு காரகன் (பகைக்கு காரணமானவன்),ருணக்காரகன் (கடன் தொல்லைக்கு காரணமானவன்) என்று பெயர்.

இந்த செவ்வாய் கிரகம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நீச்சம் அடைகிறது,அதாவது செயலற்று போகிறது.

“ஆயில்யம்” என்றால் “பிண்ணிக்கொள்வது” அல்லது “தழுவிக்கொள்வது” என்று பொருள்படும்.

இந்த ஆயில்யம் நட்சத்திரத்தின் உருவம் பிண்ணிக்கொடிருக்கும் பாம்பின் உருவமாகும்.

எனவே பிண்ணிக்கொடிருக்கும் பாம்பின் உருவத்தை தினமும் தரிசித்து வந்தால் நம் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும் என்பது ரகசியமாகும்.

Back To Top
CLOSE
CLOSE