Flash Story
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!
45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா
பெண் இயக்குனர் ஜெயலட்சுமி இயக்கியிருக்கும் ” என் காதலே “முக்கோண காதல் கதை.
தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்டம்
“ARENA” – TEST திரைப்படத்தின் முதல் பாடல் – இப்போது வெளியானது
100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!!
BV Frames தயாரிப்பில் பாபு விஜய் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!
விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !!

சனி தோஷத்தை நிவர்த்தி செய்யும் நவபாஷாண பைரவர்

சனி தோஷத்தை நிவர்த்தி செய்யும் நவபாஷாண பைரவர்…

சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது, சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். மூலவர் பெயர் சுகந்தவனேஸ்வரர், உற்சவரின் திருநாமம் சோமாஸ்கந்தர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சமீபவல்லி. இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது.
இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார்.

அவருக்கு அருகில் மூன்று பேர் வணங்கிய நிலையில் உள்ளனர். அதோடு பைரவரின் நாய் வாகனத்தைப் பிடித்தபடி, பாலதேவர் அருள்கிறார். பவுர்ணமி தோறும் மாலை வேளையில் இந்த பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.காசி பைரவர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். இந்த சிலை நவபாஷாணத்தால் ஆனது என்றும், இதனை போகர் சித்தர் செய்ததாகவும் சொல்கிறார்கள். மேலும் பழனியில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை செய்வதற்கு முன்பாகவே, இந்த பைரவர் சிலையை போகர் செய்ததாகவும் செவிவழிச் செய்தி ஒன்று உள்ளது.

இந்த நவபாஷாண பைரவரின் மீது அதிர்வுகள் அதிகம் என்பதால், இவருக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள், படைக்கப்படும் வடைமாலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் எதுவும் பக்தர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சன்னிதியின் கூரை மீது போடப்படும் வடைகளை, பறவைகள் கூட சாப்பிடுவதில்லை. பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் தீர்த்தம் கூட, பக்தர்கள் தொட முடியாதபடி கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு என்கிறார்கள். பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. அந்த முகத்தால், வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம். இவரை ‘ஆண்டபிள்ளை நாயனார்’ என்றும் அழைக்கிறார்கள். இவரை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்தி கிடைக்கும் என்கிறார்கள்.

ஸ்ரீ காலபைரவி ஜோதிட நிலையம் உங்கள் அன்பு உள்ளம் கவர்ந்த ஆன்மீக ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399

Back To Top
CLOSE
CLOSE