ஜோதிடப்படி பார்த்தால் அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ராச்சாரி, சுக்ரனுடைய ஆதிபத்யம் பெற்ற மரம் அத்தி மரம். இந்த அத்தி மரம் மிகவும் வலிமையான மரம். சுக்ரனுடைய செயல்பாடு என்பது வித்தியாசமாக இருக்கிறது. சுக்ராச்சாரி நேரடியாக மோதமாட்டார். மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரி. அதேபோல இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாதே. அதை அதிகமாகப் பார்க்க […]
காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்
காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்! நாம் ஏற்றும் விளக்குகளில் நாம் செய்யும் ஒரு சிறிய தவறு நம் வீட்டில் ஒரு சில பிரச்சனையை ஏற்படுத்தும். விளக்குகளில் திரிகளை மாற்றாமல் விட்டுவிடுவது. இது ஒரு சாதாரண விஷயம்தான். ஜோதிட ரீதியாக கருப்பு என்பது சனிகிரகத்திற்கு உரிய ஒன்று. நாம் தீபம் ஏற்றும்போது திரியின் முனைப்பகுதி கருகிப்போய்விடும்.அப்படி கருகிய இடம் சனி உடைய ஆதிக்கம் பெற்ற இடமாக மாறிவிடும். அந்த கருகிய இடத்திலேயே […]
ஆகஸ்ட் மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது
ஆன்மீக பக்த கோடிகளுக்கு வணக்கம். ஈரோடு தொண்டீசனின் ஆன்மீக சிந்தனை சிந்திப்போம். நம் வாழ்விலே ஏராளமான அற்புதங்களும், அதிசயங்களும் நடந்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்டு மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது. ஒரு மாதத்தில் இரண்டு (2) பிரதோஷம் தான் வரும். ஆனால் இந்த சார்வாரி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் மூன்று(3) பிரதோஷம் வருவது அபூர்வ பிரதோஷமாக கருதப்படுகிறது.. *1.8.2020 ஆடிமாதம் சனிப்பிரதோஷம். 16.8.2020 ஆடிமாதம் ஞாயிறு ஆதிவாரம் பிரதோஷம். 30.8.2020. ஞாயிறு ஆதிவாரம் பிரதோஷம் […]
யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ அவர்களுக்கு ராஜயோகம்
யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம். அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ‘ சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும். 24 திருநாமங்கள் ஓம் கேசவாய நமஹ : ஓம் சங்கர்ஷனாய நமஹ : […]
நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்
இந்து வில்லுக்குறி 💫நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம் 🔯இரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக்கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும்(Visiting Card),முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும்(Letter pad) காணலாம். அந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது போன்ற குறியீடு சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும்,அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம். ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் இத்தகைய […]
திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழ 108 பெருமாள் போற்றி !
திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழ 108 பெருமாள் போற்றி ! ஓம் ஹரி ஹரி போற்றி ஓம் ஸ்ரீஹரி போற்றி ஓம் நர ஹரி போற்றி ஓம் முர ஹரி போற்றி ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி ஓம் அம்புஜாஷா போற்றி ஓம் அச்சுதா போற்றி ஓம் உச்சிதா போற்றி ஓம் பஞ்சாயுதா போற்றி ஓம் பாண்டவர் தூதா போற்றி ஓம் லட்சுமி சமேதா போற்றி ஓம் லீலா விநோதா போற்றி ஓம் […]
தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.
தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும். இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் : 1.சைவம் 2.சாக்தம் 3.வைஷ்ணவம் 4.கணாபத்யம் 5.கெளமாரம் 6.செளரம் 7.ஸ்மார்த்தம் சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்…., 276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது…!! வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்……, 96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது…!! கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்…. 18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான் கணாபத்தியத்தில் […]
ஆனி மாதத்தின் கேட்டை நட்சத்திர நாளில் ‘ஜேஷ்டாபிஷேகம்’ விழா ஆலயங்களில் வெகு சிறப்பாக நடைபெறும்
ஜேஷ்ட மாதம் என அழைக்கப்படுகிற இந்த ஆனி மாதத்தின் கேட்டை நட்சத்திர நாளில் ‘ஜேஷ்டாபிஷேகம்’ விழா ஆலயங்களில் வெகு சிறப்பாக நடைபெறும். குறிப்பாக பழனியில் ஜேஷ்டாபிஷேகம் ரொம்ப பிரபலம். கேட்டை நட்சத்திரத்தை ஜேஷ்டா நட்சத்திரம் என்றும் சொல்வர். கேட்டை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ள வும், புதிய சக்திகளைப் பெறவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ […]
தலைமை பதவி தரும் ஜேஷ்டாபிஷேம் !
தலைமை பதவி தரும் ஜேஷ்டாபிஷேம் ! பெருமாளை தரிசித்தால் பலன் கிடைக்கும் ! ஜேஷ்டா நட்சத்திர நாளில் பெருமாளை தரிசனம் செய்தால் தலைமைப் பதவி தேடி வரும் என்பது ஐதீகம். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்றும் பெயர் உண்டு. எனவே இந்த நட்சத்திர நாளில் நடைபெறும் அபிஷேகத்தை, ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கின்றனர். ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். இந்த அபிஷேகத்திற்கு வழக்கமாக வடபுறத்தில் ஓடும் கொள்ளிடத்தில் நீர் எடுப்பதற்குப் பதிலாக, தெற்குப் புறம் […]
தட்சிணாமூர்த்தி திருவுருவக் காரணம்
அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களும், அவற்றின் பொருளாகும். தட்சிணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடுகின்றார்கள். சிவ தலங்களில் கருவறையின் தென் சுவரின் வெளிப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை குரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள். பஞ்சகுண சிவமூர்த்திகளில் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார். படைப்பின் கடவுளான பிரம்மாவின் […]