
காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்!
நாம் ஏற்றும் விளக்குகளில் நாம் செய்யும் ஒரு சிறிய தவறு நம் வீட்டில் ஒரு சில பிரச்சனையை ஏற்படுத்தும். விளக்குகளில் திரிகளை மாற்றாமல் விட்டுவிடுவது. இது ஒரு சாதாரண விஷயம்தான். ஜோதிட ரீதியாக கருப்பு என்பது சனிகிரகத்திற்கு உரிய ஒன்று. நாம் தீபம் ஏற்றும்போது திரியின் முனைப்பகுதி கருகிப்போய்விடும்.அப்படி கருகிய இடம் சனி உடைய ஆதிக்கம் பெற்ற இடமாக மாறிவிடும்.
அந்த கருகிய இடத்திலேயே திருப்பி திருப்பி விளக்கு ஏற்றினாலும் அதற்குண்டான பலன் நமக்கு கிடைக் காமல் போய்விடும். எப்பொழுதும் திரியை அதிகளவு நம் வீட்டில் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு திரியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மறுநாள் அந்த திரியை எடுத்து செடியின் அடியில் போட்டு விடவேண்டும். வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது மற்றவர்களோடு பேசிக்கொண்டு தீபம் ஏற்றக்கூடாது. நம் மனதை ஒருநிலைப்படுத்தி தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டால் அனைத்து விதமான சௌபாக்கியங்களும் நமக்கு கிடைக்கும்.
ஸ்ரீ காலபைரவி ஜோதிட நிலையம் ஆத்தூர்
ஆன்மீக ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399