ஜோதிடப்படி பார்த்தால் அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
சுக்ராச்சாரி, சுக்ரனுடைய ஆதிபத்யம் பெற்ற மரம் அத்தி மரம்.
இந்த அத்தி மரம் மிகவும் வலிமையான மரம்.
சுக்ரனுடைய செயல்பாடு என்பது வித்தியாசமாக இருக்கிறது.
சுக்ராச்சாரி நேரடியாக மோதமாட்டார். மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரி.
அதேபோல இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு.
அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாதே. அதை அதிகமாகப் பார்க்க முடியாது. அதனால்தான் இதுபோன்ற பழமொழி உண்டு.
அதனால்தான் சுக்ரனுடைய அம்சமாக இந்த அத்தி மரம் விளங்குகிறது.
கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் நீங்க
பரிகாரம்:
கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், சுக்ரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு நடைமுறைப் பரிகாரம் என்று பார்த்தால் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரித்தாலே அவர்களிடையே சண்டை, சச்சரவுகள் எல்லாம் நீங்கும்.
இணக்கமான சூழல் உருவாகும். தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும்.
அத்தி மரத்திலிருந்து வரக்கூடிய வைப்ரேஷன் என்று சொல்வோமே அது கணவன், மனைவி இடையே அன்யோன்யத்தைக் கொடுக்கும்.
அதனால்தான் வாழ்க்கை வளம் பெறுவதற்கும், கணவன் மனைவிக்குள் நெருக்கம், கடைசி வரையில் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு வீட்டிலுமே அத்தி மரம் இருந்தால் மிகவும் விசேஷமாக இருக்கும்.
இதுபோன்ற வைப்ரேஷன்கள் அத்தி மரத்திற்கு உண்டு.
அதன்பிறகு, அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தியானம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் நமக்கு முழுமையாகக் கிடைக்க செய்யும்.இதுபோன்ற அபார சக்தியும் அத்தி மரத்திற்கு உண்டு.
பொதுவாக அத்தி மரம் ரிஷபம், துலாம் ராசி கொண்டவர்களுக்கும், கிருத்திகை, ரோகிணி, சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும், வெள்ளிக்கிழமை மற்றும் 21 ஏப்ரல் முதல் 20 மே மாதம் வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கும் உகந்த மரமாகும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் விளக்குகிறது.
கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகள் மனித உடலில் படும்போது பலவகையான உடல் மாற்றம், மன மாற்றம், நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள்.
இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 30 நிமிடம் கட்டிப் பிடிக்கலாம். அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.
குல தெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வம் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவும் எளிய அத்தி மரக்கிளை வழிபாடு:
அத்தி மரத்தில் இருந்து ஒரு முழம் அளவிற்கு கனமான கிளை ஒன்றை உடைத்து எடுத்து வந்து அதில் “வயநமசி” என்று சிகப்பு நிறபேனாவால் எழுதி மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து மஞ்சள் பட்டு துணி ஒன்றை அந்த கிளையின் மீது சுற்றி தென்மேறகு மூலையில் வைக்கவும்.
நாம் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு தினமும் ருத்ராட்சமாலையினால் “வயநமசி” என்று 1008 தடவை தடவை வீதம் 48 நாட்கள் தொடர்ந்து ஜெபம் செய்து வந்தால் குல தெய்வம் நம் கனவில் தோன்றி தான் யார்,எங்கிருக்கின்றேன்,தனக்கு செய்ய வேண்டிய பூஜை முறைகள் பற்றி சொல்லி வாக்கு கொடுக்கும்.
இந்த பூஜையை செவ்வாய் அல்லது வெள்ளி இரவு 9 மணிக்கு மேல் வளர்பிறையில் தொடங்கி தொடர்ந்து 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம் ஸ்ரீ கால பைரவி
ஜோதிட நிலையம் விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர்.அரசு மருத்துவமனை எதிரில் ஆத்தூர் சேலம் (மாவட்டம்)
636102 சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான ஆலோசனை பெறுவதற்க்கு ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399 , 9976192660 , 9843096462