Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் – கடகம்

குரு பெயர்ச்சி பலன்கள் – கடகம்

நட்சத்திரம் – புனர்பூசம் 4ம் பாதம், பூசம், அயில்யம்

2.9.2017 காலை 6.39 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து 3.10.2018 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பார்போம்

இதுவரை 3ம் இடத்தில் இருந்து முயற்சிகளை முடக்கிவிட்டு கொண்டு தைரியத்தை அதிகப்படுத்திகொண்டு இருந்த குரு பகவான் இப்போது 4ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி காரியத்தடை ஏற்படுத்துவார்.

உடல் நலத்தில் சிறு சிறு கோளாறு ஏற்படுத்துவார், முயற்சிகளை கடினபடுத்துவார் எனவே சிந்தித்து செயாலாற்றுங்கள்.

தொழில், வியாபாரத்தில் தன, லாபம் அளிக்க கூடிய தொழில் சார்ந்த கூட்டாளிகள் தானாக முன்வந்து உதவிக்கரம் நீட்டுவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை சம்பந்தமாக வெளிநாடு பயணங்கள், உத்தியோக உயர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால வேலை பழு மிக கடுமையாக இருக்கும், உடல் அசதி ஏற்படும். மாணவகளுக்கு கல்வியில் நல்ல சிறப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அரசியல்வாதிகளுக்கு கவுன்சிலர், சேர்மென் போன்ற அதிகாரப்பதவி கிடைக்க வாய்ப்புண்டு. வீடு கட்டும் எண்ணம் உள்ளவர்கள் எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்து கொண்டு தொடங்கினால் தடை தாமதங்கள் ஏற்படாமல் கட்டி முடிப்பீர்கள்.

மொத்தத்தில் உடல் நலத்தை நன்கு பேணுங்கள், சிந்தித்து செயலாற்றுங்கள், சிறப்படைவீர்கள்.

திருவெண்காடு, ஆலங்குடி, திருநல்லாறு போன்ற நவக்கிரக ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள் 2,3
அதிர்ஷ்ட நிறங்கள் வெண்மை, மஞ்சள்
பலன்கள் சதவிதம் – 45%

– அஸ்ட்ரோ தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.cel- 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE