Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் – மிதுனம்

குரு பெயர்ச்சி பலன்கள் – மிதுனம்

நட்சத்திரம் – மிருகசிரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

2.9.2017 காலை 6.39 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து 3.10.2018 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பார்போம்

இதுவரை 4ம் இடத்தில் இருந்து கொண்டு உங்களை முன்னேற்றத்தை பற்றி சிந்திக்க மட்டும் வைத்து கொண்டு செயல்படுவதில் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த குரு பகவான் தற்போது 5ம் இடமாகிய துலாம் ராசிக்கு வந்து அதிர்ஷ்ட காற்றை வாரி தெளிக்க காத்துள்ளார்.

மனதிற்கு பிடித்த சம்பங்கள் இனி நிறைய நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். குழந்தை பிறந்து குடும்பத்தில் குதுகலம் ஏற்படலாம். புது வீடு, வாகன பாக்கியம் ஏற்படலாம். உத்யோகத்தில் ஊதிய உயர்வுகளும், மனதிற்கு பிடித்த வெளிநாடு பயணம் ஏற்படலாம். தொழிலில் சரக்கு வேகமாக விற்று தீர்ந்து இரட்டிப்பு வருமானம் அடையலாம்.

நண்பர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். பாதியில் நின்றிருந்த வீடு விஸ்தரிப்பு பணிகள் விரைவாக முடித்து மகிழ்ச்சி அடையலாம். மருத்துவ செலவு குறைந்து மன நிம்மதி அடையலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் முதலிடம் பிடிக்கக்கூடிய வாயப்புகளுண்டு. போட்டி தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு அடையலாம். அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்ட பதவிகள் தேடி வரலாம்.

மொத்தத்தில் அதிர்ஷ்ட தேவதை உங்களை அரவணைக்கும் காலம் இது, முழுவதுமாக பயன்படுத்துக் கொள்ளுங்கள்.

காளஹஸ்தி அல்லது திருநாகேஸ்வரம் சென்று வழிபடுங்கள். ராகு காலத்தில் துர்கா தேவியை வழிபடுங்கள். வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தியை வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள் 3,5
அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், பச்சை
பலன்கள் சதவிதம் – 99%

– அஸ்ட்ரோ தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.cel- 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE