
பெண்கள் வீட்டில் கோவிலாக மதிக்கக்கூடிய இடம் பூஜை அறை என்றால், மற்றொன்று இடம் சமையல் அறையாக இருக்க வேண்டும். எந்த வீட்டில் ஒரு பெண், சமையல் அறையை, பூஜை அறையாக நினைத்து சுத்தபத்தமாக வைத்துக் கொள்கிறார்களோ அந்த வீட்டில் லட்சுமி நிச்சயம் தங்குவாள் என்பது ஐதீகம். நம்முடைய வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால், அது பெண்கள் கையில்தான் உள்ளது.
இரவு நேரத்தில் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களையும், மிச்சம் மீதி உள்ள பண்டங்களையும் முறையாக எடுத்து வைக்காமல் உறங்கச் செல்லக்கூடாது.அதேபோல் மறுநாள் காலை எழுந்ததும், சமையலறையை சுத்தம் செய்யாமல் சமையலை தொடங்கக்கூடாது. காலை அவசர வேலை காரணமாக விரைவாக சமைக்க வேண்டும் என்றால், முடிந்தவரை இரவு நேரத்தில் சமையலறையை சுத்தம் செய்து வைத்துவிட்டு தூங்குவதே மிகவும் சிறப்பு.
காலை சமயலறைக்கு சென்ற உடன் அடுப்பை பற்ற வைப்பதற்கு முன்பு, கட்டாயம் துணி கொண்டு துடைக்க வேண்டும். உங்களது அடுப்பு ஏற்கனவே சுத்தமாக இருந்தாலும் பரவாயில்லை ஸ்டவ்வை பற்ற வைப்பதற்கு முன்பாக ஒரு முறை துணி கொண்டு துடைத்து விட்டு, அக்னி பகவானை ஒருமுறை மனதார வேண்டிக்கொண்டு உங்களது அடுப்பை பற்ற வைத்தால் உங்கள் கையில் சேமிப்பை அதிகரிக்கும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு அடுப்பை வானம் பார்க்க வைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். அப்படி என்றால்.. அடுப்பின் மேல் வெறுமனே ஏதாவது ஒரு பாத்திரத்தை வைப்பது மிகவும் நல்லது.
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம் ஸ்ரீ கால பைரவி
ஜோதிட நிலையம் விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர்.அரசு மருத்துவமனை எதிரில் ஆத்தூர் சேலம் (மாவட்டம்)
636102 சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான ஆலோசனை பெறுவதற்க்கு ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் 8526223399 , 9976192660 , 9843096462